ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

வீர வணக்கம் !!!


நண்பனுக்காக என்றொரு கவிதையை எழுதியிருந்தேன்.முத்துகுமார் தன் உயிரை தியாகம் செய்யும் முன்பே அதை வெளியிட்டு வீர வணக்கம் செய்கிறேன்.

சயனைடு குப்பியால்
சாவை சந்தித்தாய்
பாவப்பட்ட மக்களான
பச்சை தமிழினத்துக்காக

தலைமுறைகள் சில
தடம்தெரியாமல் போனபின்னும்
மாற்றங்கள் என்றெதுவும்
மாறவில்லை நண்பா

சொந்தமண்ணில் கால்பதித்தால்
சொந்தமில்லாமல் போய்விடுகின்றது
கன்னிவெடியில் சிக்கி
கைகளும் கால்களும்

உயிருக்கு பயந்து
நாடுகடந்து போனாலும்
வாழ்வதற்கொரு வழி
எங்குமில்லை நண்பா

தாய்மண்ணை காக்கா
கூட்டம் உயிர்விடும்போது
உயிரைக் காக்க
விட்டிருக்கிறோம் தாய்மண்ணையே

எங்களிடம் மிச்சமிருப்பதெல்லாம்
இறந்தவர்களின் நினைவுகளும்
இருப்பவர்களின் கனவுகளும்
மட்டுமே நண்பா

ஈழம் பற்றிய கவிதைக்கு jackpoem.blogspot.com க்கு செல்லுங்கள்.

வீர வணக்கம் வீர வணக்கம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக